045-2287276 balangodaps@gmail.com Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda

விளம்பர பலகைகள் காட்சிப்படுத்துதல்

1. பலாங்கொடை பிரதேசச் சபை – 2026 ஆம் ஆண்டுக்கான விளம்பரங்கள் / காட்சிப் பரப்பளவு தொடர்பான வரி விதிப்பு

பலாங்கொடை பிரதேச சபை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தீர்மான எண் 06.01 இன் கீழ் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவு சபையால் அங்கீகரிக்கப்பட்டது என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

ஆரியதாச கமஎதிகே
தவிசாளர்
பலாங்கொடை பிரதேசச் சபை

திததி: 2025 செப்டம்பர் 11
பலாங்கொடை பிரதேசச் சபை
திகதுர

முன்மொழிவு

1987 ஆம் ஆண்டின் 15 இலக்க பிரதேசச் சபைச் சட்டத்தின் 122(1) பிரிவின் விதிகளின்படி மற்றும் 1988.08.23 அன்று வெளியிடப்பட்ட 520/7 இலக்க விசேட வர்த்தமானியில் வீடமைப்பு மற்றும் கட்டுமான அமைச்சர் அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நிலையான துணைச் சட்டத்தின் 39 ஆம் பகுதியின் விளம்பரங்கள் / காட்சி சூழல் தொடர்பான விதிகளின்படி, பலாங்கொடை பிரதேசச் சபை எல்லைக்குள் தெரு, சாலை, கால்வாய் அல்லது திறந்த வெளியில் காணக்கூடிய வகையில் எந்தவொரு விளம்பரத்தையும் காட்சிப்படுத்துவதற்காக கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளப்படி உரிமக் கட்டணம் விதிக்கப்பட வேண்டும் என்று பலாங்கொடை பிரதேசச் சபை முன்மொழிகிறது.

அட்டவணை

துணை எண் விவரம் ரூ. (ஒரு சதுர அடி)
1 சுவர் அல்லது பலகையில் காட்சிப்படுத்தப்படும் (திரைப்பட விளம்பரங்களை தவிர) எந்தவொரு விளம்பரமும் 70.00
2 சுவரில் அல்லது பலகையில் மீது அல்லது ஒரு தாங்கியின் மூலம் காட்டப்படும் ஒளிரும் விளம்பரங்கள் 120.00
3 அனைத்து வகையான விளம்பர பதாகைகள் 70.00
4 வணிக நிறுவன விளம்பர பலகையில் நிறுவனப் பெயரை தவிர்ந்து மேலதிகமாக காட்சிப்படுத்தப்படும் விளம்பரம் (அதிகபட்சம் 10 சதுர அடி வரை) 10.00
5 தற்காலிக விளம்பர பலகைகள் (திரைப்பட விளம்பரங்களை தவிர) 35.00

கட்டணங்கள்

தொடர்பு

முகவரி
Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda
தொலைபேசி
045-2287276
தொலைநகல்
045-2288909
மின்னஞ்சல்
balangodaps@gmail.com
தலைவர்
071-3734992
செயலாளர்
077-4073305