045-2287276 balangodaps@gmail.com Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda

2026 ஆம் ஆண்டிற்கான வாகனங்கள் மற்றும் விலங்குகள் தொடர்பான வரி விதிப்பு

2025 செப்டம்பர் 11 ஆம் திகதி நடைபெற்ற பலாங்கொடை பிரதேசச் சபையின் பொதுக்கூட்டத்தில் தீர்மான இலக்கம் 06.01 இன் கீழ் பின்வரும் முன்மொழிவு அங்கீகரிக்கப்பட்டது என்பதை பொதுமக்களுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 147 மற்றும் 148 ஆம் பிரிவுகளின் படி, 2026 ஆம் ஆண்டுக்கான இந்த வரிகள் 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன் பிரதேச சபை அலுவலகத்தில் செலுத்தப்பட வேண்டும்.

ஆரியதாச கம எத்திகே
தலைவர்
பலாங்கொடை பிரதேசச் சபை
2025 செப்டம்பர் 11

முன்மொழிவு

1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் 147 மற்றும் 148 ஆம் பிரிவுகளின் படி, கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டிற்கான வாகனங்கள் மற்றும் விலங்குகளுக்கான வரி விதிக்கப்படுவதாகவும், அது 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தப்பட வேண்டும் என்றும் பலாங்கொடை பிரதேசச் சபை முன்மொழிகிறது.

வாகனம் / விலங்கு வகை ரூ. (ஒரு காலாண்டுக்கு)
மற்றய அனைத்து வாகனங்களும்25.00
வர்த்தக பயன்பாட்டிற்கான மிதிவண்டி அல்லது மூன்று சக்கர வண்டி18.00
வர்த்தகமற்ற பயன்பாட்டிற்கான மிதிவண்டி அல்லது மூன்று சக்கர வண்டி4.00
ஒவ்வொரு வண்டிக்கும்20.00
ஒவ்வொரு கை வண்டிக்கும்10.00
ஒவ்வொரு ரிக்ஷாவிற்கும்7.50
ஒவ்வொரு குதிரை, போனி அல்லது கழுதைக்கும்15.00
ஒவ்வொரு யானைக்கும்50.00

விலக்கு: 26 அங்குலத்தை மீறாத சக்கரங்களைக் கொண்ட குழந்தைகள் வாகனங்கள், வீல்பரோ, தனியார் இடங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் கை வண்டிகள் மற்றும் வர்த்தக நோக்கமற்ற கை வண்டிகள் இந்த வரியிலிருந்து விலகும்.

வரையறை: இந்த அட்டவணையில் "வர்த்தக பயன்பாடு" என்பது விற்பனைக்காக அல்லது ஏதேனும் வணிகம் அல்லது தொழிலுக்காக பொருட்கள், சரக்குகள் அல்லது எழுத்து/அச்சு பொருட்களை எடுத்துச் செல்வதை குறிக்கிறது.

கட்டணங்கள்

தொடர்பு

முகவரி
Balangoda Pradeshiya Sabha, Digadura, Balangoda
தொலைபேசி
045-2287276
தொலைநகல்
045-2288909
மின்னஞ்சல்
balangodaps@gmail.com
தலைவர்
071-3734992
செயலாளர்
077-4073305